15 படங்களுக்குள் நுழைந்த 'ஹோம்பவுண்ட்', அடுத்த இறுதிச் சுற்றில் நுழையுமா ?
ADDED : 8 days ago
அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் தான் உலக அளவில் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. 2025ல் வெளிவந்த படங்களுக்கான 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
அதற்கான நாமினேஷன்கள் ஏற்கெனவே முடிந்துள்ளன. இந்தியா சார்பில் ஹிந்திப் படமான 'ஹோம்பவுண்ட்', சர்வதேச திரைப்படங்களுக்கான போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறுதியாகத் தேர்வு செய்யப்படும் 5 படங்களுக்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 15 படங்களில் தற்போது ஹோம்பவுண்ட்' படமும் இடம் பெற்றுள்ளது. இதற்கான அறிவிப்பை இரண்டு தினங்களுக்கு முன்பு ஆஸ்கர் விருதுக் குழு அறிவித்துள்ளது.
நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்துள்ள 'ஹோம்பவுண்ட்' படம் செப்டம்பர் 26ம் தேதியன்று வெளியானது.