உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா

மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா


'நேரம், பீட்சா, ஜிகர்தண்டா' போன்ற படங்கள் மூலம் புகழ்பெற்றவர் பாபி சிம்ஹா. கடந்த ஆண்டு அவர் நடித்த 'இந்தியன் 2' படம் வெளியானது.

இந்த ஆண்டு எந்தப் படமும் வெளியாகவில்லை. அடுத்து பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் படத்தை தெலுங்கு இயக்குநர் மெஹர் யாரமாட்டி இயக்குகிறார். ஹெப்பா படேல் நாயகியாக நடிக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் தனிகில்லா பரணி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே. கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த் சதாசிவுனி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாபி சிம்ஹாவுக்கு 'மாஸ் மாஸ்டர்' என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது பாபி சிம்ஹாவின் 25வது படமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !