சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து
ADDED : 7 hours ago
பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு ஜனவரி 27ம் தேதியான இன்று 60வது பிறந்தநாள் ஆகும். இந்த பிறந்தநாளை அவர் பிரமாண்டமாக கொண்டாடுகிறார். இதற்காக மும்பையில் உள்ள தனது பன்வெல் என்ற பண்ணை வீட்டில் ஹிந்தி திரைப்பட துறையை சார்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர் நடிகைகள் என அனைவருக்கும் இன்று இரவு அவர் ஒரு பிரம்மாண்டமான விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். குறிப்பாக இதுவரை பாலிவுட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிகளை விட மிகச் சிறப்பாக இதை நடத்துகிறாராம் சல்மான்கான். அதோடு, பாலிவுட் திரை பிரபலங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க பெரிய அளவில் போலீஸ் பாதுகாப்போம் போடப்பட்டுள்ளதாம்.