ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது?
இயக்குனர் பாரதிராஜா (84) கடந்த சில நாட்களுக்குமுன்பு சுவாச கோளாறு மற்றும் வேறு சில உடல்நல பிரச்னைகள் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், அவர் உடல் நிலை சீராக இருக்கிறது. விரைவில் வீடு திரும்புவார் என்று அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று சென்னை தி.நகர் மருத்துமனையில் இருந்து சென்னை அமைந்தகரையில் இருக்கிற இன்னொரு பிரபல தனியார் மருத்துவனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவரை ஐசியூவில் வைத்து தீவிர சிகிச்சை அளிப்பதாகவும், அடுத்த கட்ட சிகிச்சைக்கு முயற்சிப்பதாககவும் கூறப்படுகிறது.
இது குறித்து அவர் தரப்பினரிடம் விசாரித்தால் அவர் உடல்நிலையில் பெரிய பிரச்னைகள் இல்லை. சில நாட்களுக்கு பின் அவர் வீடு திரும்புவார். மகன் மனோஜ் மறைந்தபின் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டார். வயது காரணமாக இன்னும் பல பிரச்னைகள், குடும்பத்திலும் கொஞ்சம் பிரச்னைகள், அதனால், சில மாதங்களாக வெளியே வராமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். சில மாதங்கள் மலேசியாவில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று மீண்டும் சென்னை திரும்பினார். இப்போது ட்ரீட்மென்ட்டில் இருக்கிறார் என்கிறார்கள்.