உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ்

2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ்

2025ம் ஆண்டில் ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வெளிவந்து இந்த வருடத்தில் மட்டும் 280க்கும் மேற்பட்ட படங்கள் மொத்தமாக வெளியாகின. இதற்கு முன் இப்படி வெளியானதில்லை. இந்த சாதனையை 2026ம் ஆண்டு முறியடித்து அது 300ஐத் தொட்டுவிடுமோ என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே எழுந்துள்ளது.

2026ம் வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 2ம் தேதி “அனலி, டியர் ரதி, ஜஸ்டிஸ் பார் ஜெனி, காக்கா, மாமகுடம், தி பெட்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் அதிகபட்சமாக ஒரு வாரம்தான் தியேட்டர்களில் இருக்க முடியும்.

அடுத்த வாரம் ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்துள்ள 'பராசக்தி' ஆகிய படங்கள் வெளியாகின்றன. தமிழகத்தில் இருக்கும் அனைத்து ரிலீஸ் தியேட்டர்களிலும் இந்த இரண்டு படங்களும் வெளியாகிவிடும். அதனால், வேறு எந்த படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை. இரண்டு படங்களின் வரவேற்பைப் பொறுத்து அதற்கடுத்த வாரமான ஜனவரி 16 ஏதாவது படங்கள் வெளியாகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !