உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ'

குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ'


இனிகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ'. பி. நாராயணன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் நாராயணன், படம் குறித்து பேசியதாவது:

குழந்தை என்பது எல்லோருக்கும் கிடைக்கும் வரம். அந்த வரத்தை நாம் உருவாக்குகிறோம் எனும்போது அதில் பெருமை அடைய வேண்டும். ஸ்பைடர்மேன் பறப்பது, ஹீமேன் அடிப்பது என நிஜத்தில் நடக்காத பல பேண்டசி விஷயங்களைதான் குழந்தைகளுக்கு திரைப்படத்தில் அறிமுகப்படுத்துகிறோம். நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியுள்ளோம்.

யாரையும் அடிக்க போவதில்லை, யாரும் பறக்க போவதில்லை. நாம் சராசரி மனிதனாக இருக்கும்போது யாருக்காவது உதவுகிறோம், சிரிக்கிறோம், நன்றியை நினைத்து பார்க்கிறோம், அன்பாக இருக்கிறோம். இந்த நடைமுறை விஷயங்களை படத்தில் பேசியிருக்கிறோம். நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான். எல்லோரையும் அன்பாக வைத்திருங்கள், அன்பு உங்களுக்கு திரும்ப கிடைக்கும் இதைத்தான் இந்த படம் வலியுறுத்துகிறது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !