உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான்

கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான்

விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜனநாயகன் வருகிற ஜனவரி ஒன்பதாம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. ஜனநாயகன் படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள எஸ்.எஸ்.ஆர் என்டர்டயின்மெண்ட் என்ற நிறுவனம் முதல் நாள் முதல் காட்சி எப்போது திரையிடப்படும் என்பது குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அதில், கேரளாவில் ஜனநாயகன் படத்தின் முதல் கட்சியை ஜனவரி 9ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திரையிடுவதற்கு திட்டமிட்டோம். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அதனால் ஜனநாயகன் படத்தின் முதல் கட்சியை காலை 6:00 மணிக்கு திரையிட திட்டமிட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !