உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ்

அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ்

பைசன் படத்தை அடுத்து தனது புதிய படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். விருதுநகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கியுள்ளார் மாரி செல்வராஜ். அதில் அவர் பேசும்போது, பைசன் படத்திற்கு பிறகு அடுத்து இயக்கும் படத்திற்கான கதை வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். அதோடு ரசிகர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. முதல் படத்தை இயக்கும்போதே நான் எங்கிருந்து வருறேன் என்பதை கூறிவிட்டுதான் படத்தை தொடங்கினேன். என்னை பொருத்தவரை எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். இப்போதைக்கு நான் அரசியலில் இல்லை. என்றாலும் எதிர்காலத்தில் அரசியல் இயக்கம் தொடங்கினால் சாதிக்கு எதிராகத்தான் தொடங்குவேன் என்றும் அந்த மேடையில் பேசி இருக்கிறார் மாரி செல்வராஜ் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

Sathish, Chennai
2025-12-29 21:15:55

கொஞ்சம் யோசிச்சி பேசு


PV
2025-12-29 17:38:43

யாரு நி? Comedy பண்ணாத boss uh . DMK தர பைசா வெச்சு வாழ்