மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார்
ADDED : 3 minutes ago
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால். 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இப்போதும் அவரது படங்கள் வசூலை குவித்து வருகின்றன. இவரது தாயார் சாந்தகுமாரி (90) இன்று(டிச., 30) காலமானார். கேரளாவின் கொச்சி, எலமாக்கரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் அவர் இறுதி நாட்களை கழித்து வந்தார். நரம்பியல் தொடர்பான உடல்நலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரமான செய்தி அறிந்ததும், நடிகர் மோகன்லால் உடனடியாக கொச்சிக்கு விரைந்துள்ளார். சாந்தகுமாரி மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.