ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக்
ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்த ஜனநாயகன் ரிலீஸ் ஆக உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் படம், விஜயின் கடைசி படம் என்பதால், அவருடைய ரசிகர்கள் உட்பட பலர் முதல் காட்சியை படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். இப்போது அதிகாலை காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி தருவது இல்லை. ஆகவே, 9 மணிக்குதான் முதல்காட்சி தொடங்க வாய்ப்பு. சரி, முதல்காட்சி டிக்கெட் எவ்வளவு என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.
பொதுவாக, விஜய் படங்களின் முதல்காட்சி டிக்கெட் விலை 500 முதல் 2 ஆயிரம், 3 ஆயிரம் வரை ஏரியா, தியேட்டர் பொறுத்து விற்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தமுறை அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் பட டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்பட்டால் அது விவாத பொருளாக மாறும். அவர் அரசியலுக்கு கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும், ஆளுங்கட்சியும் அந்த விலைக்கு டிக்கெட்டை விற்க விடாது, வேறுவகையில் தியேட்டர்களுக்கு பிரஷர் கொடுக்கும்.
ஆனால் முதற்காட்சியில் அதிக விலைக்கு டிக்கெட் விற்றால்தான் தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்களுக்கு ஒரளவு லாபம் கிடைக்கும். ஆகவே, ஜனநாயகன் விஷயத்தில் என்ன நடக்கப் போகிறது என பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். விஜய்க்கு முதல்காட்சி விவகாரம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல்.