உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ?

தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ?

அழகும், திறமையும் நிறைந்த தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. மிஷ்கின் இயக்கத்தில் 2012ல் வெளியான 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன்பின் தெலுங்கு, ஹிந்தி என நடித்து பிரபலமானார். 10 வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடித்த 'பீஸ்ட்' படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி ஆனார். இருந்தாலும் 'பீஸ்ட்' படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை.

அடுத்து மூன்று வருட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் சூர்யா நடித்து வெளியான 'ரெட்ரோ' படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படமும் விமர்சன ரீதியாகக் கூட வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் படத்தில் இடம் பெற்ற 'கனிமா' பாடல் சூப்பர் ஹிட்டானது. அடுத்து 'கூலி' படத்தில் 'மோனிகா' பாடலுக்கு மட்டும் நடனமாடினார் பூஜா. அந்தப் பாடலும் அதிக வரவேற்பைப் பெற்றது. படங்கள் தராத பிரபலத்தை இரண்டு பாடல்களும் தந்தது.

தமிழில் 'முகமூடி, பீஸ்ட், ரெட்ரோ' என தொடர் சறுக்கல்கள் இருந்தாலும் பூஜாவுக்கு பெரிய நம்பிக்கையாக இருப்பது 'ஜனநாயகன்'. அடுத்த வாரம் வெளியாக உள்ள இந்தப் படம் எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்று நம்பிக்கையில் இருக்கிறாராம் பூஜா.

இந்தப் படத்தை அடுத்து தமிழில் 'காஞ்சனா 4' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !