சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் கலையரசனின் மகள்!
ADDED : 7 days ago
நடிகர் கலையரசன் 'மெட்ராஸ், தேவாரா, ஜகமே தந்திரம், பேட்ட, தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவை அல்லாமல் ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தற்போது இவரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதன்படி, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பாரி இளவழகன் இயக்கி, நடிக்கவுள்ள படத்தில் கலையரசனின் மகள் அதிதி முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் நடிக்கின்றார். மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ரோஜா செல்வமணி நடிக்கின்றார். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.