'டாக்சிக்' படத்தில் ரெபேக்கா ஆக தாரா சுட்டாரியா!
மலையாள பெண் இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் 'கே.ஜி.எப்' பட புகழ் யஷ் 'டாக்சிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் தயாராகி, அத்துடன் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, நயன்தாரா ஆகியோரின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியானதை தொடர்ந்து இன்று தாரா சுட்டாரியா 'ரெபேக்கா' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதுவரை இவர் ஹிந்தி மொழி படங்களில் மட்டுமே நடித்துள்ளார். டாக்சிக் படத்தின் மூலம் தாரா சுட்டாரியா தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.