உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம் 2' படம் நிறுத்தி வைப்பு! : தயாரிப்பாளர் தகவல்

விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம் 2' படம் நிறுத்தி வைப்பு! : தயாரிப்பாளர் தகவல்


கடந்த ஆண்டில் தெலுங்கில் 'ஜெர்ஸி' பட இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்த படம் 'கிங்டம்'. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஆனாலும், கிங்டம் 2ம் பாகம் எப்போது உருவாகும் என கேள்விகள் ரசிகர்களிடம் இருந்து கொண்டிருந்தது. இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கிங்டம் 2ம் பாகம் தற்போது உருவாகாது. தள்ளி வைத்துள்ளோம் எனக் கூறினார். இது குறித்து தெலுங்கு சினிமா வட்டாரத்தில் 'கிங்டம் 1' பட தோல்வியினால் கிங்டம் 2ம் பாகம் கைவிடப்பட்டது என்பதை மறைமுகமாக தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !