உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிவின் பாலியின் முதல் 100 கோடி படம் 'சர்வம் மாயா'

நிவின் பாலியின் முதல் 100 கோடி படம் 'சர்வம் மாயா'


மலையாளத் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களில் 100 கோடி படங்கள் என்பது வருவது அத்திரையுலகத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது. கடந்த வருடக் கடைசியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளிவந்த 'சர்வம் மாயா' படம் பத்து நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.

அகில் சத்யன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், நிவின் பாலி, ரியா ஷிபு, அஜு வர்கீஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

'நேரம், பிரேமம்' படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் நிவின் பாலி. அவர் நடித்து வெளிவந்த படங்களில் இதுவரையில் அதிக வசூலைக் குவித்த படமாக 2015ல் வெளிவந்த 'பிரேமம்' படம் 75 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது அந்த வசூலை 'சர்வம் மாயா' முறியடித்து 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது.

நடிக்க வந்து பத்து வருடங்களுக்கு மேலான நிலையில் நிவின் பாலியின் முதலாவது 100 கோடி படமாக 'சர்வம் மாயா' அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

இளந்திரையன் வேலந்தாவளம்
2026-01-04 18:28:53

இந்த வசூல் படத்தை நம்ம நிருபர் மொக்கை படம் னு விமர்சனம் செச்சஞிருக்காரு