உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பில் இயக்குனர் பாரதிராஜா

தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பில் இயக்குனர் பாரதிராஜா


இயக்குனர் பாரதிராஜா (84) கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவாச கோளாறு மற்றும் வேறு சில உடல்நல பிரச்னைகள் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், அவர் உடல் நிலை சீராக இருக்கிறது. விரைவில் வீடு திரும்புவார் என்று அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை மற்றும் பாரதிராஜா தரப்பில், ''தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகிறார். ​அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதுடன், மருத்துவ நிபுணர்கள் குழுவினால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். தகுந்த மருத்துவ ஆதரவுடன், அவரது உடல்நிலை அளவீடுகள் (Vital parameters) சாதாரண நிலையில் உள்ளன. அவர் அளிக்கப்படும் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார். இது குறித்த கூடுதல் தகவல்கள் தேவைப்படும்போது தெரிவிக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !