உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் உரிமம் எத்தனை கோடி தெரியுமா?

'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் உரிமம் எத்தனை கோடி தெரியுமா?


எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்காலிகமாக அவரது கடைசி படமாக அறிவித்து நடித்துள்ள படம் 'ஜனநாயகன்'. இதில் வில்லன் கதாபாத்திரத்தில் பாபி டியோல் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜனநாயகன் படம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதுவரை ஜனநாயகன் படம் தெலுங்கில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்கா இல்லையா என விவாதங்கள் இருந்தது. இந்த நிலையில் நேற்று வெளியான ஜனநாயகன் படத்தின் டிரைலர் மூலம் பகவந்த் கேசரி படத்தின் மூலக்கதை தான் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், ஜனநாயகன் படக்குழு பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை ரூ. 4 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !