உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதிய சாதனை படைத்தது 'ஜனநாயகன்' டிரைலர்

புதிய சாதனை படைத்தது 'ஜனநாயகன்' டிரைலர்


தமிழ் சினிமா உலகில் டிரைலர், டீசர், பாடல்கள் ஆகியவை யு டியூப் தளத்தில் வெளிவரும் போது அவற்றின் பார்வை எண்ணிக்கை புதிய சாதனை படைக்கிறதா என்பதும் அதற்கான வரவேற்பைத் தெரிந்து கொள்வதாக இருக்கிறது. விஜய், அஜித் படங்கள்தான் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக மாறி மாறி சாதனை படைப்படு வழக்கம்.

விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தின் டிரைலர் நேற்று மாலை 6.45 மணி அளவில் யு டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வெளியானது.

சற்று முன் வரை யு டியூப் தளத்தில் அதன் பார்வை எண்ணிக்கை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சேர்த்து 'ரியல் டைம்' பார்வைகளாக 46 மில்லியனைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'தி கோட்' படத்தின் 24 மணி நேர டிரைலர் சாதனையான 39 மில்லியன் பார்வைகள் சாதனையை 'ஜனநாயகன்' முறியடித்துள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் 26 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.

மதியம் 5 மணி நிலவரப்படி யு டியூப் தளத்தில் தமிழில் 30 மில்லியன், தெலுங்கில் 6 மில்லியன், ஹிந்தியில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

24 மணி நேரம் முடிய இன்னும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் உள்ளதால் இந்த பார்வைகள் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !