அஜித்தின் மங்காத்தா ஜனவரி 23ல் ரீரிலீஸ்!
ADDED : 7 days ago
கடந்த 2011ம் ஆண்டு வெங்கட்
பிரபு இயக்கத்தில் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய
வேடங்களில் நடித்து வெளியான படம் ‛மங்காத்தா'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த
இந்த படம் பணக்கடத்தல் சம்பந்தப்பட்ட கதைய மையமாகக் கொண்டு உருவானது.
சமீபத்தில் அஜித் நடித்த ‛அட்டகாசம்' படம் ரீரிலீஸ் செய்யப்பட்ட நிலையில்
அடுத்தபடியாக மங்காத்தா படத்தையும் ரிலீஸ் செய்யப் போவதாக
அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வருகிற ஜனவரி 23ம் தேதி மங்காத்தா
படத்தை ரீரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு
பிறகு பிப்ரவரி மாதம் அஜித் - ஷாலினி இணைந்து நடித்த ‛அமர்க்களம்' படமும்
ரீரிலீஸ் ஆகிறது.