சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது
ADDED : 5 days ago
சீமான் இயக்கத்தில் மாதவன், பூஜா நடித்த ‛தம்பி' படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. அப்போது அந்த படத்தின் கதையும், மாதவன் கேரக்டரும் பேசப்பட்டது, படம் வெற்றி ஆனது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்பு தம்பி படம் ரீரிலிஸ் ஆக உள்ளது. மாதவன் இப்பொழுது ஹீரோ நடிப்பிலிருந்து விலகி குணச்சித்ர வேடத்தில் நடிக்கிறார். வாழ்க்கை வரலாறு கதைகளில் நடிக்கிறார். பெரும்பாலும் துபாயில் தான் வசிக்கிறார். படத்தின் ஹீரோயின் பூஜா திருமணமாகி இலங்கையில் செட்டில் ஆகிவிட்டார். இவர்கள் இருவருக்கும் வெற்றி படமாக அமைந்த தம்பி பற்றி விரைவில் இவர்கள் தங்கள் மலரும் நினைவுகளை பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.