200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'டாக்சிக் - ராயா' வீடியோ
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நாயகனாக நடிக்கும் 'டாக்சி' படத்தில் யஷின் கதாபாத்திர அறிமுக வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. பெண்ணியம் பேசிய இயக்குனர் கீது மோகன்தாஸ் அந்த வீடியோவில் ஒரு பெண்ணை போகப் பொருளாக மட்டுமே காட்டியுள்ளார் என்ற கடுமையான சர்ச்சை எழுந்துள்ளது. ஒரு பெண் இயக்குனரா இப்படி ஒரு காட்சியை வைத்தார், அப்படியென்றால் படம் எப்படி இருக்கும் என்று பல சந்தேகங்களை படம் எழுப்பியுள்ளது.
இதனிடையே, யூடியுபில் மட்டும் இந்த வீடியோ 80 மில்லியன் பார்வைகளை மூன்றே நாட்களில் கடந்துள்ளது. அது மட்டுமல்லாது இதர சமூக வலைதளங்களிலும் சேர்த்து மொத்தமாக 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொங்கல், சங்கராந்தி வெளியீடு என அறிவிக்கப்பட்ட தமிழ், தெலுங்குப் படங்களின் டிரைலர்களைக் காட்டிலும் 'டாக்சிக்' வீடியோ இரண்டு மடங்கு அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ளது.