சமமான சம்பளத்திற்காக குரல் கொடுக்கும் சுதா கொங்கரா!
இயக்குனர் சுதா கொங்கரா தமிழில் 'துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று' போன்ற படங்களை இயக்கியவர். தற்போது 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இப்படம் நேற்று திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. இதையொட்டி பேட்டிகள் அளித்து வருகிறார் சுதா கொங்கரா.
அதில் சுதா கொங்கரா சினிமாவில் உள்ள ஆண், பெண் பாலின வித்தியாசம் குறித்து பேசியதாவது, ஒரு படத்தை ஒரு ஆண் இயக்குனர் இயக்கினால் அவருக்கு ரூ. 100 கோடி சம்பளம், அதே படத்தை நான் இயக்கினால் ரூ. 50 கோடி சம்பளம். ஆனால், எனக்கு சமமான சம்பளத்திற்காக நான் இன்று வரை போராடி வருகிறேன். மேலும், ஒரு லேடி சூப்பர் ஸ்டார் படத்தின் வசூல், பல நடிகர்களின் வசூலை தாண்டினாலும், அந்த லேடி சூப்பர் ஸ்டாரின் சம்பளம் அந்த நடிகர்களின் சம்பளத்தில் 1/4 விகிதத்தில் தான் தருகிறார்கள். என சினிமாவில் உள்ள பாகுபாடு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் சுதா கொங்கரா.