உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வேதநாங் ரெய்னா, குஷி கபூரின் 2 வருட காதல் முறிந்ததா?

வேதநாங் ரெய்னா, குஷி கபூரின் 2 வருட காதல் முறிந்ததா?


பாலிவுட் திரையுலகில் போனி கபூர், மறைந்த ஸ்ரீ தேவி தம்பதியினரின் இரண்டாவது மகள் குஷி கபூர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் பாலிவுட்டில் சினிமா பின்புலம் இல்லாமல் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வருபவர் வேதநாங் ரெய்னா.

வேதநாங் ரெய்னா, குஷி கபூர் என இருவரும் 'தி ஆர்ச்சைல்' என்கிற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் பாலிவுட் திரையுலகில் யூத் காதலர்களாக வலம் வந்துள்ளனர். இப்போது ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்து உள்ளனர் என பாலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !