உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரேட்டிங்கிற்குத் தடை வாங்கிய சிரஞ்சீவி படத் தயாரிப்பாளர்

ரேட்டிங்கிற்குத் தடை வாங்கிய சிரஞ்சீவி படத் தயாரிப்பாளர்


அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் நாளை ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ள படம் 'மன சங்கர வரபிரசாத் காரு'. இப்படத்திற்கான முன்பதிவு ஆன்லைன் இணையதங்களில் ஆரம்பமாகி நடந்து வருகிறது.

பொதுவாக ஆன்லைன் இணைய தளங்களில் டிக்கெட் முன்பதிவுடன் அந்தப் படத்திற்கான ரேட்டிங்கும் இடம் பெறுவது வழக்கம். டிக்கெட்டை முன்பதிவு செய்பவர்கள் மட்டும் படத்திற்கான ரேட்டிங்கை அளிக்கும் வகையில் இணையதளம் செயல்படும். இருந்தாலும், அதிலும் சிலரது அத்துமீறல் நடக்கிறது. போட்டிக்கு வரும் படங்களைப் பற்றியோ, அல்லது தங்களுக்குப் பிடிக்காத ஹீரோக்களின் படங்களுக்கோ நெகட்டிவ் ரேட்டிங் கொடுப்பதை சிலர் செய்கிறார்கள்.

இதனால், சிலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு 'மன சங்கர வரபிரசாத் காரு' தயாரிப்பாளர் அந்த ஆன்லைன் டிக்கெட் இணையதளத்தில் ரசிகர்கள் ரேட்டிங் கொடுப்பதற்கு நீதிமன்றத் தடையைப் பெற்றுள்ளார். இதனால், டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தற்போது அந்தப் படத்திற்கு ரேட்டிங் கொடுக்க முடியாது.

இதற்கு முன்பு கன்னடத் திரையுலகத்தில் கடந்த வருடக் கடைசியில் வெளிவந்த 'தி டெவில், மார்க், 45' ஆகிய படங்களுக்கு இப்படி தடை உத்தரவு பெற்றுள்ளார்கள். இனிமேல் தமிழிலும், பலரும் இதைத் தொடர்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

கன்னடத் திரையுலகத்தினர்தான் இதை முதலில் ஆரம்பித்து வைத்துள்ளார்கள் என்பதால் விஜய்யின் 'ஜனநாயகன்' படத் தயாரிப்பாளர்களும் கன்னடத் திரையுலகம் என்பதால் அவர்களும் இதை தமிழில் ஆரம்பித்து வைக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !