உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமன்னா கீ ரோலில் நடித்துள்ள 'ஓ ரோமியோ' ஹிந்தி படம் பிப்.,13ல் ரிலீஸ்!

தமன்னா கீ ரோலில் நடித்துள்ள 'ஓ ரோமியோ' ஹிந்தி படம் பிப்.,13ல் ரிலீஸ்!


ஹிந்தியில் ஷாகித் கபூர், திரிப்டி டிம்ரி, நானா படேகர், தமன்னா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'ஓ ரோமியோ'. விஷால் பரத்வாஜ் இயக்கி உள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 13ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். இப்படத்தில் தமன்னா கதாநாயகி அல்லாத கதையை நகர்த்தக்கூடிய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கீ ரோலில் நடித்திருக்கிறார். இது நெகடீவ் கலந்த வேடமாம். மேலும், அப்படத்திற்கு முன்பு ஹிந்தியில் 'ரெய்டு-2' படத்தில் நாசா என்ற ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடி இருந்த தமன்னா, அடுத்தபடியாக, ரேஞ்சர் மற்றும் ரோஹித் ஷெட்டி இயக்கும் படங்களில் நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !