உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனவரி 15ல் திரைக்கு வரும் 'திரௌபதி- 2' படத்தின் டிரைலர் வெளியானது!

ஜனவரி 15ல் திரைக்கு வரும் 'திரௌபதி- 2' படத்தின் டிரைலர் வெளியானது!


பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தில் இயக்குனரான மோகன்ஜி, அதன் பிறகு திரௌபதி என்ற படத்தை இயக்கினார். அந்த படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் படத்தை இயக்கியவர், தற்போது திரௌபதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். அவரது முந்தைய படங்களில் நடித்த ரிச்சர்ட் ரிஷி இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் நட்டி நடராஜ், பரணி, ஒய்.ஜி .மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படம் சரித்திர கால கதையில் உருவாகி உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் சர்ச்சை ஏற்படுத்தியதால் இரண்டாம் பாகத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் பிரச்னை ஏற்படுமோ என்று கருத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதோடு, இப்படத்தின் டிரைலரை நேற்று வெளியிட்டுள்ளார்கள்.

அதில், இந்த படம் ஜனவரி 15ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கலுக்கு விஜய்யின் 'ஜனநாயகன்' திரைக்கு வராத நிலையில் 'பராசக்தி'யை தொடர்ந்து 'வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில், திரௌபதி 2' உள்ளிட்ட பல படங்கள் திரைக்கு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !