உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டாக்சிக்' படத்தில் நடிக்க 15 கோடி சம்பளம் வாங்கிய நயன்தாரா?

'டாக்சிக்' படத்தில் நடிக்க 15 கோடி சம்பளம் வாங்கிய நயன்தாரா?


தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கியுள்ள 'மூக்குத்தி அம்மன்- 2' படத்தில் நடித்துள்ள நயன்தாரா, கன்னடத்தில் யஷுடன் 'டாக்சிக்', மலையாளத்தில் 'பேட்ரியாட், டியர் ஸ்டூடன்ட்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள 'மன சங்கர வர பிரசாத் காரு' என்ற படம் வருகிற ஜனவரி 12ம் சங்கராந்தியையொட்டி திரைக்கு வருகிறது.

மேலும், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் 'டாக்சிக்' படத்தில் யஷின் அக்காவாக கங்கா என்ற வேடத்தில் நடித்துள்ள நயன்தாரா, ஒரு ஸ்டைலிஷான ஆக்சன் ரோலில் நடிக்கிறார். இதே படத்தில் ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, கியாரா அத்வானி, தாரா சுடாரியா என மேலும் நான்கு நடிகைகள் இருந்தபோதும் நயன்தாராவுக்கே படத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் இந்த டாக்ஸிக் படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா 18 கோடி சம்பளம் கேட்ட நிலையில், அவருக்கு 15 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் கன்னடம், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !