நடிகைக்கு ஷாக் கொடுத்த டிராகன் நடிகர்
டிராகன் நடிகர், 'ஹீரோ'வாக நடித்த முதல் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்த அந்த மூன்றெழுத்து மலையாள நடிகை, சில காட்சிகளில் நடிகர் திரும்பத்திரும்ப, 'ரீ-டேக்' வாங்கிக் கொண்டே இருந்ததை பார்த்து முகம் சுளித்துள்ளார்... 'என்னுடைய திறமைக்கு இதுபோன்ற தத்தி நடிகர்களுடனெல்லாம் நடிக்க வேண்டியதுள்ளதே...' என்றெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் அவரை மட்டம் தட்டியும் பேசி இருக்கிறார். ஆனால், அப்போது, நடிக்க தெரியாமல் இருந்த, டிராகன் நடிகர், 'ஹிட்' பட நடிகராகி விட்டார்.
இந்த நேரத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் மேற்படி நடிகை, சமீபத்தில், டிராகன் நடிகரை சந்தித்து, 'மீண்டும் உங்களுடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்...' என்று கல் எறிந்துள்ளார். அதற்கு நடிகரோ, 'இன்னும் உன்னுடன் நடிக்கும் அளவுக்கு நான் நடிப்பில் தேர்ச்சி பெறவில்லை...' என்று சிரித்துக்கொண்டே, அம்மணிக்கு, 'ஷாக்' கொடுத்து விட்டார்.