கணவர் நடிகருடன் மல்லுக்கு நிற்கும் மனைவி நடிகை
ADDED : 15 hours ago
சார்பட்டா நடிகரின், 'மார்க்கெட்' குடை சாய்ந்து கிடப்பதால், அவரது நட்பு வட்டார இயக்குனர்களும் கைவிட்டு விட்டனர். இதனால், அடுத்தபடியாக கைக்காசை போட்டாவது, 'ஹீரோ'வாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு புதிய பட நிறுவனத்தை துவங்கி உள்ள நடிகர், தன் மனைவி நடித்து வாங்கிய ஒரு வீட்டை விற்று, அந்த பணத்தில், அப்படத்தை தயாரித்து நடிக்க களமிறங்கியுள்ளார்.
ஆனால், நடிகரின் இந்த செயலால், 'அப்-செட்'டான அவரது வூட்டுக்கார அம்மணியோ, சினிமாவில் சொந்த காசில் சூனியம் வைக்கக்கூடாது என்பது தெரிந்தும் நடிகர் இந்த விஷப்பரீட்சையில் இறங்கி இருப்பதால், துக்கம் தாளாமல் சரக்கடித்துவிட்டு அவருடன் மல்லுக்கு நிக்கிறார்.