'பராசக்தி, தி ராஜா சாப்' படங்களின் வசூல் விவரம்!
ADDED : 9 hours ago
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் 'பராசக்தி'. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதில், பராசக்தி படம் நேற்று உலக அளவில் 24.5 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் 13.5 கோடியும், சென்னையில் மட்டும் 2 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும், பிரபாஸ் நடிப்பில் கடந்த ஒன்பதாம் தேதி திரைக்கு வந்த 'தி ராஜா சாப்' படம் முதல் இரண்டு நாட்களில் உலக அளவில் 140 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. இந்த படத்தில் பிரபாஸ் உடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.