நான் நிறைய கதைகள் எழுதி வருகிறேன் : நடிகர் சூரி
இயக்குனர் இரா.சரவணன் எழுதியுள்ள சங்காரம் நூல் அறிமுக விழாவில் நடிகர் சூரி பேசியது, ‛‛படிக்க வேண்டிய புத்தகத்தை சரியாக படித்திருந்தால், இந்நேரம் நல்ல இடத்தில் இருந்திருக்கலாம். சமீபத்தில் சமுத்திரகனி ஒரு புத்தகத்தை படி என கொடுத்துவிட்டார். ஆனால், அதை படிக்க முடியாததால் அவரை பார்க்கும் போதெல்லாம் ஓடிவிடுவேன். புத்தகம் என்பதை பொழுதுபோக்காக நினைத்துவிட்டேன். புத்தகம் என்பது சாதாரண விஷயம் அல்ல. பல சீர்திருத்தங்களை புத்தகங்கள் உருவாக்கியுள்ளது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புத்தகங்களும், கதைகளும் அழிவதில்லை. பல வரலாறுகளை புத்தகங்கள் தாங்கி நிற்கின்றன. வாசிப்பது மிகவும் முக்கியமானது. இந்த புத்தகம் சினிமாவாக உருவாக வேண்டும் என விரும்புகிறேன். நானும் இப்போது புத்தகங்கள் படித்து வருகிறேன், நிறைய கதைகள் எழுதி வருகிறேன். எனது அப்பாவின் வாழ்க்கை வரலாறை எழுதி வருகிறேன்'' என்றார்.