சிரஞ்சீவி படத்தின் முதல் நாள் வசூல் 84 கோடி
அனில் ரவிப்புடி இயக்கத்தில், சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படம் 'மன ஷங்கர வரபிரசாத் காரு'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 84 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிரஞ்சீவி நடித்து கடந்த வருடம் எந்தப் படமும் வெளியாகவில்லை. 2023ல் 'வால்டர் வீரய்யா, போலோ சங்கர்' ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் சங்கராந்திக்கு வெளிவந்த 'வால்டர் வீரய்யா' வெற்றிப் படமாக அமைந்தது. 'போலோ சங்கர்' படம் தோல்விப் படமாக அமைந்தது. தமிழில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'வேதாளம்' படத்தின் ரீமேக்தான் 'போலோ சங்கர்'.
அந்தத் தோல்வியிலிருந்து, நேற்று வெளியான 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படம் சிரஞ்சீவியை மீட்டெடுத்துள்ளது. அனில் ரவிப்புடி இயக்கத்தில் கடந்த வருட சங்கராந்திக்கு வெளியான 'சங்கராந்திக்கு வஸ்துனம்' படம் 50 கோடி செலவில் தயாராகி 300 கோடி வரை வசூலித்தது.
அந்தப் படத்தின் வசூலை 'மன ஷங்கர வரபிரசாத் காரு' கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.