அருண் விஜய், முத்தையா கூட்டணியில் புதிய படம்
ADDED : 18 hours ago
குட்டிப் புலி, கொம்பன், மருது, விருமன் போன்ற வெற்றிகளைப் படங்களை இயக்கியவர் முத்தையா. இவரது இயக்கத்தில் வெளியான சில படங்கள் தோல்வியை தழுவின. அதிலும் குறிப்பாக முத்தையா கடைசியாக இயக்கி நேரடியாக ஓடிடியில் வெளியான 'ராம்போ' படமும் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து முத்தையா அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்போது அருண் விஜய் வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் முத்தையா. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் துவங்குகிறது என திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் முடித்த அருண் விஜய் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.