ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல்
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன்'. ஜன., 9ம் தேதியே வெளியாக வேண்டிய படம் சென்சார் பிரச்னை, கோர்ட் தடையால் சிக்கலில் உள்ளது. அடுத்தவாரம் வழக்கு விசாரணையில் நல்ல தீர்ப்பு வரும் பட்சத்தில் இந்த படம் வெளியாகலாம்.
இந்தப்பட விவகாரத்தில் தணிக்கை துறையின் செயல்பாடு விமர்சனத்திற்கு உள்ளானது. இதன் பின்னணியில் அரசியல் உள்ளதாக கண்டன குரல்களும் எழுந்தன. குறிப்பாக தணிக்கை துறை மத்திய அரசின் கீழ் வருவதால் மத்திய அரசையும் விமர்சித்து வருகின்றனர் அரசியல் கட்சியினர்.
ஜனநாயகன் பட விவகாரத்தில் ஏற்கனவே தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் மத்திய அரசுக்கு கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸின் ராகுல் வெளியிட்ட பதிவில், ‛‛ஜனநாயகன் படத்தை முடக்க நினைப்பது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். தமிழக மக்களின் குரலை நசுக்கி நீங்கள் வெற்றி பெற முடியாது மோடி ஜி அவர்களே...'' என குறிப்பிட்டுள்ளார்.