உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா

தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா

தெலுங்கில் கொடி கட்டி பறக்கும் ஸ்ரீலீலா தமிழில் பராசக்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த பட நிகழ்ச்சிகளில், இந்த படம் குறித்து பேட்டி கொடுக்கும்போது முடிந்தவரை தமிழில் பேச முயற்சித்துள்ளார். கொஞ்சம் தவறுகள் இருந்தாலும் தமிழில் பேசுகிறார். சென்னையில் நடந்த பராசக்தி வெற்றி விழாவில் கூட தமிழில் பேசினார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‛‛சில மாதங்களாக பராசக்திக்குள் இருக்கிறேன். அந்த படத்துக்கு நான்தான் சொந்தமாக டப்பிங் செய்தேன். அதுவே பலருக்கு தெரியவில்லை. வருங்காலத்திலும் வாய்ப்பு கிடைத்தால் சொந்த குரலில் பேசுவேன். ஒரு மொழியில் நடிக்கும்போது அதை கற்க வேண்டும். அதை மதிக்க வேண்டும் என்பது என் பாலிசி. அந்தவகையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் நான் தமிழில் பேசுகிறேன். பராசக்தி குழுவால் இது சாத்தியமானது. என்னுடைய முதல் அறிமுகம் நல்ல படமாக அமைந்தது மகிழ்ச்சி. படம் பார்த்தவர்கள் ரத்னமாலா கேரக்டரை புகழ்கிறார்கள். தமிழக்காக நீங்க போராடி இருக்கிறீர்கள் என்கிறார்கள். அது மகிழ்ச்சி. வழக்கம்போல் என் டான்சும் பாராட்டப்பட்டுள்ளது, இதை விட வேறு என்ன வேண்டும்'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !