உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம்

2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம்


தெலுங்கில் இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் 'மன ஷங்கர வர பிரசாத் காரு' எனும் படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் மற்றும் கேத்ரின் தெரசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடித்துள்ளார்.

இப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வெகுஜன மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 120 கோடி வசூலைக் கடந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளனர். மேலும், பொங்கல் பண்டிகை முடிவதற்குள் ரூ. 250 கோடி வசூலைக் குவிக்கும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !