உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்!

சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்!


'என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்து வரும் படம் 'மை டியர் சிஸ்டர்'. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

அக்கா, தம்பி கதை களத்தை மையப்படுத்தி காமெடி மற்றும் எமொஷனல் படமாக உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இப்போது பொங்கல் வாழ்த்துடன் வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் இப்படம் 2026ம் ஆண்டு சம்மருக்கு ரிலீஸ் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டு உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே அருள்நிதி நடித்துள்ள 'டிமாண்டி காலனி 3' 2026ம் ஆண்டு சம்மரில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த அருள்நிதி படம் இப்போது இந்த ரேஸில் முன்பு வரும் என்பதை தான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !