உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி!

மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி!


தமிழில் 'தகராறு, வீர சிவாஜி, தேன்' உள்ளிட்ட சில படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் கணேஷ் விநாயகன். தேன் படம் நல்ல விமர்சனங்களை பெற்று இவரை தேடி பல பெரிய வாய்ப்புகள் வந்தது. ஒரு சில காரணங்களால் அந்த வாய்ப்புகள் கைகூடவில்லை.

சமீபகாலமாக கணேஷ் விநாயகன் 'தகராறு' படத்திற்கு பிறகு மீண்டும் அருள்நிதியை வைத்து படம் இயக்குவதற்காக முயற்சித்து வந்தார். தற்போது மீண்டும் 'தகராறு' கூட்டணி இணைகிறது. கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கவுள்ளார் என இன்று அறிவித்துள்ளனர். அருள்நிதி உடன் இணைந்து ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், கிருத்திகா பாலா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தை 90 பிக்சர்ஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !