மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர்
ADDED : 8 hours ago
ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு திரைக்கு வந்த படம் மரகத நாணயம். பேண்டஸி காமெடி கதையில் உருவான இதை ஏ.ஆர்.கே சரவணன் இயக்கினார். தற்போது மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இந்த படத்திலும் முதல் பாகத்தில் நடித்த ஆதி, நிக்கி கல்ராணி மீண்டும் இணைத்துள்ள நிலையில் அவர்களுடன் பிரியா பவானி சங்கர், சத்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். பொங்கலையொட்டி இந்த மரகத நாணயம்-2 படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவும் முதல் பாகத்தை போலவே பேன்டஸியான காமெடி கதையில் உருவாகி இருப்பது தெரிகிறது.