உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2

திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2

மலையாளத்தில் மோகன்லால், ஜித்து ஜோசப் கூட்டணியில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது திரிஷ்யம் 3. ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு பாகங்கள் வெற்றியைப் பெற்றன. மூன்றாம் பாகம்தான் கடைசியாக இருக்கப் போகிறது என்பதால் அதில் என்ன நிகழப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ரொம்பவே எதிர்பார்க்கப்படும் படமாக இது ரிலீஸ் ஆவதால் போட்டிக்கு வேறு படங்கள் வெளியாக வாய்ப்பு இல்லை என்ற நிலையில் ஆச்சரியமாக மலையாளத்தில் உருவாகி வரும் வாழ 2 திரைப்படம் இதே தேதியில் (ஏப்ரல் 2) ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2024ல் வெளியான வாழ திரைப்படம் சிறிய படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது வைக்கும் நம்பிக்கை மையப்படுத்தி உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் இதன் இரண்டாம் பாகம் வாழ 2 என்கிற பெயரில் தயாராகி வந்தது.

இந்த நிலையில் தான் திரிஷ்யம் படத்துடன் மோதும் விதமாக இதன் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ படத்தை குருவாயூர் அம்பல நடையில் பட இயக்குனர் விபின் தாஸ் தான் தயாரித்து அதன் கதையையும் எழுதி இருந்தார். இப்போது இந்த இரண்டாம் பாகத்திற்கான கதையையும் அவரே எழுதியுள்ளார். இந்த படத்தை சவின் எஸ்.ஏ என்பவர் இயக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !