உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள்

கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள்

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக கதாநாயகி, குணச்சித்திர மற்றும் காமெடி நடிகை என பல பரிமாணங்களில் பயணித்து வருபவர் நடிகை ஊர்வசி. இவரும் மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். ஊர்வசியின் மகள் தேஜா லட்சுமி தற்போது வளர்ந்து சினிமாவில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஊர்வசியுடன் இணைந்து பல படங்களில் நடித்த கமல்ஹாசன் கிட்டத்தட்ட ஊர்வசிக்கு ஒரு குரு போன்றவர். அவரை ஒரு முறையேனும் சந்தித்து ஆசி பெற வேண்டும் என விரும்பினார் ஊர்வசியின் மகன் தேஜா லட்சுமி.

மகளின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கமலின் இல்லத்திற்கு அவரை அழைத்துச் என்றார் ஊர்வசி. அங்கே கமலிடம் ஆசிகள் பெற்றார் தேஜா லட்சுமி. இது குறித்து அவர் கூறும்போது, “சிறு வயதில் நான் அம்மாவுடன் கமல் சாரின் படப்பிடிப்புக்கு செல்லும்போது படப்பிடிப்பு இடைவேளைகளில் என்னை தூக்கிக்கொண்டு கமல்ஹாசன் சார் செட்டில் வேடிக்கை காட்டிக் கொண்டிருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை ஒவ்வொரு முறையும் நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பி அது தடைப்பட்டு கொண்டே இருந்தது. அது இப்போது நிறைவேறி உள்ளது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !