உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல்

பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல்

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்து இந்திய அளவில் பிரபலமாக உள்ளார். அவருக்கும் 'சீதா ராமம்' தெலுங்குப் படம் மூலம் தமிழிலும் பிரபலமான மிருணாள் தாகூரும் பிப்ரவரி மாதம் காதலர் தினமான 14ம் தேதியன்று திருமணம் செய்து கொள்ளப் போவதாக பாலிவுட்டில் தகவல் பரவி உள்ளது.

சமீபத்திய பாலிவுட் நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர் தனுஷ். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் வளர்ந்து டீன் ஏஜ் வயதில் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தனுஷ் தன்னுடைய சிறந்த நண்பர் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் மிருணாள். கடந்த சில நாட்களாகவே இருவரது திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. தற்போது வட இந்திய மீடியாக்கள் இதை செய்தியாகவே வெளியிட்டுள்ளார்கள். இது குறித்து தனுஷ், மிருணாள் இருவரிடமிருந்தும் எந்தவிதமான மறுப்பும் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !