விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும்
விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் மற்றும் சட்டபிரச்னையில் சிக்கி தவிக்கிறது. இன்னமும் வழக்கு நீண்டுகொண்டே இருப்பதால் எப்ப ரிலீஸ் ஆகும் என தெரியாமல் தவிக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மீண்டும் ஐகோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு என்ன மாதிரியான தீர்ப்பு வரப்போகிறதோ? சென்சார் போர்டு புதுசாக என்னென்ன சட்ட சிக்கல்களை கொண்டு வரப்போகிறதோ என தவிக்கிறார்கள் படக்குழுவினர்.
அதேபோல், அஜித் பங்கு பெறும் கார் ரேஸ், வெளிநாட்டில் அவர் நடத்தும் போட்டோ செஷன் குறித்த செய்திகள் தான் அதிகம் வருகின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள படம் குறித்து பொங்கலுக்கு கூட அறிவிப்பு வரவில்லையே என்று பீல் பண்ணுகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
அதேபோல் சூர்யா நடிக்கும் கருப்பு படம் குறித்தும் பொங்கலுக்கு அறிவிப்பு வரவில்லை. பொங்கலுக்கு போஸ்டர் வராது. அடுத்து வரும் 2வது சிங்களில் படத்தின் ரிலீஸ் அப்டேட் வரும் என்கிறார் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி. சி பிரச்னையால் கருப்பு ரிலீஸ் தள்ளிப்போகிறதாம்.