தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம்
ADDED : 14 hours ago
ஜெய் அமர் சிங் இயக்கத்தில் கழுகு கிருஷ்ணா, ஸ்வாதி, தேவதர்ஷினி, கிங்ஸ்லி, லொள்ளுசபா மாறன் நடிப்பில் உருவாகும் படம் ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்'. இது எந்த மாதிரி பேய் படம் என்று இயக்குனரிடம் கேட்டால், தலைப்புதான் அப்படி. ஆனால், இது பக்கா காமெடி கலந்த பேமிலி கதையாம்.
பல ஆண்டுகள் கோமாவில் இருந்த தாயை பழைய நிலைக்கு கொண்டு வருகிறான் மகன். 1990களில் அவர் வாழ்ந்த இடங்கள், அவரின் நண்பர்களை பார்க்க வைக்கிறான். பழைய நினைப்பில் அம்மா பேச, என்ன நடக்கிறது என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறோம். நான் லண்டனில் படித்துவிட்டு என்றென்றும் புன்னகை படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். ஆக் ஷன் படங்கள் நிறைய வரும், இந்த காலகட்டத்தில் காமெடி கதையை உருவாக்கி உள்ளேன். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். சென்னை சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்கிறார் இயக்குனர்.