தமிழுக்கு வரும் தெலுங்கு இளம் ஹீரோ
தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகரான திரிக்குன் தமிழில் தேநீர் விடுதி, தங்க மகன், பொது நலன் கருதி, காடவர், டெவில் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். தற்போது 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' படத்தின் மூலம் நாயகனாகி இருக்கிறார்
இந்த படத்தை அருண் விசுவல்ஸ் சார்பில் கோவை ரமேஷ் தயாரித்து ஜி.ராஜசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், சாம்ஸ், மதன்பாபு, தனசேகர், வினோத் ஆகியோரும் நடித்துள்ளனர். காமெடியும், காதலும் கலந்த இந்த படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் விரைவில் திரைக்கு வருகிறது. அருணகிரி இசையமைத்துள்ளார். விஜயஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ராஜசேகர் கூறும்போது, ''மூன்று வெவ்வேறு விதமான காதலை மையமாக வைத்து மூன்று கோணங்களில் காமெடி கலாட்டாதான் இந்த படம். இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்ற டிரெண்டிங்கான படமாக இருக்கும். படம் பார்க்க வரும் அனைவரும் துவக்கம் முதல் இறுதிவரை சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்”, என்றார்.