உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலரை மணந்தார் ‛பிக்பாஸ்' ஜூலி

காதலரை மணந்தார் ‛பிக்பாஸ்' ஜூலி

ஜல்லிக்கட்டை வைத்து சென்னை, மெரினாவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். ஓரிரு படங்கள், டிவி சீரியல்களில் நடித்தார். பின்னர் மாடலிங் செய்து வந்தார். இவர் முகமது ஜக்ரிம் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் இவர்களது காதலுக்கு இரு வீட்டில் சம்மதம் சொல்ல கடந்த டிசம்பரில் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று இவர்களது திருமணம் இனிதே நடந்து முடிந்தது. முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தை தொடர்ந்து சென்னை, பரங்கி மலையில் இருக்கும் பேட்ரிக் தேவாலயத்தில் வைத்து வரவேற்பும் நடந்தது. அதில் திரைப் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஜூலி திருமணம் செய்த நபர் தனியார் டிவியில் பணியாற்றி வருகிறார். அந்த டிவி நிகழ்ச்சிகளில் ஜூலியும் பங்கேற்றபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !