உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரித்விராஜூக்கு வில்லனாக மலையாளத்தில் நுழைந்த கத்தி பட வில்லன்

பிரித்விராஜூக்கு வில்லனாக மலையாளத்தில் நுழைந்த கத்தி பட வில்லன்

மலையாளத்தில் மோகன்லாலை வைத்து புலி முருகன் என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் இயக்குனர் வைசாக். தற்போது இவர் பிரித்விராஜை வைத்து கலிபா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இவர் சினிமாவில் அறிமுகமானதே பிரித்விராஜ், மம்முட்டி இணைந்து நடித்த போக்கிரி ராஜா படம் மூலம் தான். அந்த வகையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரித்விராஜுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் வைசாக்.

இந்த படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் இணைந்துள்ளார். இவர் விஜய்யின் கத்தி படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் இவர் நடிக்கும் முதல் படம் இது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு கலிபா படத்தில் இவர் நடிக்கும் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு இந்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !