உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2வில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க காரணம் இதுதான் : விஜய்சேதுபதி

ஜெயிலர் 2வில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க காரணம் இதுதான் : விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி கடந்த சில வருடங்களாகவே கதாநாயகனாக மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் வில்லனாக, குணசித்திர நடிகராக, நட்புக்காக சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் கதாபாத்திரத்தில் என மாறி மாறி நடித்து வந்தார். சமீப காலமாகத்தான் இனிமேல் கதாநாயகனாக மட்டுமே கவனம் செலுத்தி நடிக்க போகிறேன் என்று கூறி வந்தார். அதற்கேற்றபடி அவர் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2வில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி.

ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய்சேதுபதி. இப்போது ஜெயிலர் 2வில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு என்ன காரணம் என சமீபத்தில் விஜய் சேதுபதி கூறும்போது, “இந்த படத்தில் நடிப்பதற்கு காரணம் ரஜினி சார் மீதான அன்பு தான். அவருடனேயே நான் இருக்க விரும்புகிறேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவர் இந்த திரை துறையில் பல தலைமுறைகளாக நீடித்து வருகிறார். அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. இதுதான் ஜெயிலர் 2வில் நான் நடிக்க காரணம்” என்று ரஜினியின் மீதான தனது அபிமானத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் விஜய்சேதுபதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !