உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா?

மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா?


அட்லி இயக்கிய 'ஜவான்' படம் இந்தியின் சூப்பர் ஹிட்டாகி, வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து வந்த ஷாருக்கானுக்கு வெற்றியை கொடுத்தது. முதன்முறையாக தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. அதனால், அட்லி மீது ஷாருக்கானுக்கு, அவரின் நண்பர்கள், குடும்பத்தினருக்கு தனி மரியாதை. இப்போது அல்லு அர்ஜூனை வைத்து படம் இயக்கி வரும் அட்லி, அடுத்து ஷாருக்கானை வைத்து படம் இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அது, 'டான் 3' ஆக இருக்கலாம் என்றும் தகவல்.

அமிதாப் பச்சான் நடித்த 'டான்' படம் 1978ல் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் தமிழ் ரீமேக்தான் ரஜினி நடித்த பில்லா. 2006ம் ஆண்டு இந்தியில் 'டான் 2'வில் நடித்தார் ஷாருக்கான். அஜித் நடிக்க பில்லாவும் தமிழில் ரீமேக் ஆனது. இப்போது 'டான் 3'யில் நடிக்க ஷாருக்கான் ஆசைப்படுகிறார். அந்த படத்தை தனது பேவரைட் இயக்குனர் அட்லி இயக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாக தகவல்.

அமிதாப் நடித்த டான் படத்தை சந்திரபரோட்டும், ரஜினி நடித்த பில்லா படத்தை ஆர்.கிருஷ்ணமூர்த்தியும், அஜித்தின் பில்லா ரீமேக்கை விஷ்ணுவர்தனும் இயக்கினர். ஷாருக்கான் நடித்த 'டான் 2' படத்தை பர்ஹான் அக்தரும், அஜித்தின் 'பில்லா 2'வை சக்ரி இயக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !