உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்?

மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்?


பொங்கலுக்கு வெளியான படங்களில் 'தலைவர் தம்பி தலைமையில்' படம், மற்ற படங்களை விட விமர்சன ரீதியில் ஹிட்டாகி உள்ளது. ஆனால், வசூல் ரீதியில் இன்னும் போக வேண்டிய துாரம் நிறைய இருக்கிறது. அதனால் தானே முன்னின்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார் ஹீரோ ஜீவா.

பட ரிலீஸ் ஆன நாளில் சென்னை தியேட்டருக்கு மாட்டு வண்டியில் வந்தார். அதற்கு முன்பு வடபழனி கோயிலுக்கு சென்று வழிபட்டார். மதுரை ஜல்லிக்கட்டுக்கு சென்று படம் குறித்து பேசினார். மதுரை பாண்டி கோயிலுக்கு சென்றார். நேற்று திருச்செந்துார் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடியில் பேட்டி அளித்தார். அடுத்து கோவை சென்று இருக்கிறார்.

இப்படி ஜீவாவே முன்னின்று செய்ய, படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அவரே இருப்பதும் ஒரு காரணம். தவிர, படத்தின் இயக்குனர் நிதேஷ் சஹதேவ் மலையாளி. அவருக்கு தமிழ் சரி வர தெரியாது. அதனால், படத்தின் வெற்றிக்காக அவரே ஊர், ஊராக செல்கிறார். பொங்கலுக்கு வந்த படங்களில் பராசக்திக்காக சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, வா வாத்தியாருக்காக கார்த்தி ஆகியோர் இப்படி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், அவர்களை விட ஜீவா அதிகமாக நேரத்தை செலவிடுகிறார்.

அவருக்கு பல ஆண்டுகளுக்குபின் ஒரு வெற்றி என்பதால் உற்சாகமாக இருக்கிறார்கள். மற்ற ஹீரோக்கள் ஒரு கட்டத்துக்குபின் ஒதுங்கிவிட்டனர். ஜீவா இன்னமும் படத்துக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார். விரைவில் படத்தின் வெற்றி விழாவும் நடக்க உள்ளது என்கிறார்கள் படக்குழுவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

suresh Sridharan
2026-01-20 09:04:59

அருமையான சினிமா குழந்தைகளுடன் பெரியவர்களுடன் காணலாம் TTT


angbu ganesh, chennai
2026-01-19 17:28:34

இவர் படமெல்லாம் டைரக்டர் தயவு இல்லேன்னா ஓடாது அதன் ஓடறார்